வெந்து தணிந்தது காடு
சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு வெளியான அதே நாளில் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது. அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது
தனுஷ் ரசிகர்கள்
மேலும் நானே வருவேன் டீசரை திரையரங்கம் ஒன்றில் பிரத்யேகமாக ஸ்க்ரீன் வைத்து திரையிட்டுள்ளனர். அங்கு தனுஷ் ரசிகர்கள் டீசர் வெளியிட்டை கொண்டாடி இருக்கின்றனர்.
👆🏼வானொலி கேட்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்
இதற்கிடையே அங்கு வந்த தனுஷ் ரசிகர்கள் சிலர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பேனரை கிழித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.