மக்கள் கிராமசேவையாளர் மீது தொடர் குற்றச்சாட்டு
கிளி நொச்சி பூநகரி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி நான்னகாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்றுவரை தமது கிராம சேவையாளர் தங்களை வந்து பார்வையிடவில்லை என்றும் மக்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
அன்றாடம் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டே பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வந்தார்கள் ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெற்றோர்கள் தொழிலக்குச் செல்லவில்லை எவ்வாறு பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது என்று குறித்த பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இதே நேரம் மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கிராம சேவையாளர் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார் நான்காவது நாளாக எமது பாரம்பரிய தொழிலை மீட்பதற்காக போராடும் எங்களை இதுவரை வந்து பார்வையிடவில்லை மாறாக அனைத்து இடங்களுக்கும் மக்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்தார்கள்.
மேலும் தங்களது வாழ்வாதார கடற்தொழிலை மீட்பதற்காக வடக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.