ஒவ்வொரு வருடமும் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் நலன்புரி சங்க தலைவர் திரு.மகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று(3) காலை பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வழிபாடுகளை பெரியகடை ஸ்ரீ ஜான வைரவர் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ ஸ்ரீகரன் குருக்கள் நிகழ்த்தினார்.
மேலும் வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் எழுந்தருளச் செய்யப்பட்டு, நவதானிய பூரண கும்பம் வைக்கப்பட்டு, பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
குறித்த வழிபாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்டான்லி டீமெல் அவர்களுடன் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் பக்தி பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.