Tuesday, January 21, 2025

(Photos)-மாகாண மட்ட விளையாட்டு விழாவில் பதக்கங்களை குவித்த மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை

வடமாகாண ரீதியாக இடம்பெற்ற 2022 ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப்பதக்கம் , ஐந்து வெண்களப்பதக்கங்களுடன்  ஆண்கள் பிரிவில் 84 புள்ளிகளுடன் வடமாகாண வலய பாடசாலைகளுக்குள் மூன்றாம் இடத்தையும் மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
குறிப்பாக மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் அவர்களின் வழிநடத்தலின் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் பயிற்றுவிப்பில் இம்முறை செல்வன் P.புரோமின் (12 வயது ஆண்கள்  பிரிவில்)
 உயரம் பாய்தலில் 2 ம் இடத்தையும்,செல்வன் S.அபிஷேக்(14 வயது ஆண்கள் பிரிவில்) உயரம் பாய்தல் 4 ம் இடத்தையும்,செல்வன் R.ஜெரோன்(16 வயது ஆண்கள் பிரிவில்) நீளம் பாய்தலில் 1ம் இடத்தையும் 200m ஓட்ட நிகழ்வில்  4ம் இடம் இடத்தையும் 400m ஓட்ட நிகழ்வில் 3 ம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர்.
மேலும் செல்வன் E.றொய்சன்   (16 வயது ஆண்கள் பிரிவு)300m தடைதாண்டல் ஓட்டம் 4 ம் இடத்தையும்,100m தடைதாண்டல் ஓட்டத்தில் 3 ம்  இடத்தையும்
செல்வன்.H.P.சித்தும் அவிஸ்க(20 வயது ஆண்கள் பிரிவு 100m ஓட்டத்தில் 3 ம் இடத்தையும் பெற்று கொண்டனர்.
மேலும் செல்வன்.S.W.சியான் பெல்சியன்(20,வயது ஆண்கள் பிரிவில் 110m தடைதாண்டல் ஓட்டம் 3ம் இடம்.அஞ்சலோட்டம் 12 வயது ஆண்கள் 4×50m அஞ்சலோட்டம் 2ம் இடத்தையும் அஞ்சலோட்டம் 14 வயது ஆண்கள் பிரிவு  4×100m அஞ்சலோட்டம் 2ம் இடம் பெற்ற அஞ்சலோட்டத்தில்  16 வயது ஆண்கள் பிரிவு    4×100m அஞ்சலோட்டம் 2ம் இடம் (11)அஞ்சலோட்டம் 20 வயதுப் பிரிவு ஆண்கள் பிரிவு, 4×100m,அஞ்சலோட்டம் 4ம்  இடம், 4*400m அஞ்சலோட்டம் 3ம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக புள்ளிகளின் அடிப்படையில்  84 புள்ளிகளுடன் வட மாகாண வலய பாடசாலைகளில்  மூன்றாம் இடத்தையும் மன்னார்  வலயத்தின் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும்  மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது.
மேலும் இப்போட்டியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை சார்பாக பங்கு பற்றிய 32 மாணவர்களில் 25 மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles