மன்னார் பேசாலை சேர்ந்த மெடோசன் பெரேரா அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் மன்னார் பேசாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவர்.
பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் உயர் கல்வியையும் தொடர்ந்தார்.
இவர் தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளராகவும்,மாவட்ட மத நல்லிணக்க குழு செயற்பாட்டாளராகவும் அதே நேரம் தேர்தல் கண்காணிப்பாள
ராகவும் பணி புரிந்துள்ளதுடன் தற்போது சர்வதேச நிறுவனமான FAIRMED foundation பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.