Wednesday, January 22, 2025

மன்னார் தம்பதிகளுக்கு நேர்ந்த பயங்கரம்-கழுத்தை நெறித்து கொள்ளை..!

வாளுடன் ரயிலில் ஏறிய இரு கொள்ளையர்கள் பெண்ணின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழன்(6) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து வாதுவ நோக்கி பயணித்த புகையிரதம், அங்குலான புகையிரத நிலையத்தை அடைந்த போது, ​​இரு கொள்ளையர்களும் புகையிரதத்தில் ஏறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ரயிலில் ஏறும் போது இந்த பெட்டியில் கணவன் மனைவி மட்டுமே பயணித்ததாகவும், சந்தேகநபர்கள் பெண்ணை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை அறுக்க முயன்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கணவன்-மனைவி தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ரயிலில் பயணித்த பலர் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அப்போது சந்தேகத்துக்கு இடமான இருவர் முன்னோக்கி ஓடி வந்து ரயிலில் இருந்து குதித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பயணிகள் காவல்துறை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) அறிவித்ததை அடுத்து மொரட்டுவ காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ​​ ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்த சந்தேக நபர் ஒருவர் புகையிரத தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயிலில் இருந்து குதித்த மற்றைய சந்தேகநபர் 2 இலட்சம் ரூபா தங்க நகை மற்றும் பணப்பையை எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த கணவன் மனைவி இருவரும் மன்னார், பள்ளிமுனை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மொரட்டுவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரால் தாக்கப்பட்ட நபரும் தாக்கப்பட்ட பெண்ணும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையனின் தலையில் காயங்கள் இருப்பதாகவும், சந்தேக நபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றவர் எனவும் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் எனவும் மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles