‘பிக் பாஸ்’ என்றாலே எப்போதும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம்.
சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பிரபலமடைந்தார். அவர் அதற்குப் பிறகு நடிகையாகத் தற்போது தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
தற்போது ஆரம்பமாகியுள்ள ‘பிக் பாஸ்’ 6 ஆவது சீசனில் போட்டியாளராக இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்பவர் பங்கேற்றுள்ளார்.
அவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லொஸ்லியாவைப் போல் ஜனனிக்கும் ஆர்மி தொடங்கிவிட்டார்கள்.
அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.