யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (9.10.2022) பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
பிடிக்கப்பட்ட 14 சுறா மீன்களும் சுமார் 2000 கிலோகிராமிற்கும் அதிக நிறை கொண்டது என தெரியவருகிறது.
இந்த நிலையில் அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவற்றை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.