22வது திருத்தச்சட்டத்தின் மூலம் மக்களின் இறைமை பலப்படுத்தப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும், எனினும் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தத்தில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அவர் ஆதரவளிப்பாரா என வினவியபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் ஜனநாயக இயல்புடையதாகவும், மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தாம் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைவுப்படுத்திய அவர், தமது காலத்தில் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தத்திலேயே குறைபாடுகள் இருந்தன என்றும் கூறினார்.