றெஜி(சமாதானநீதவான்) அவர்களின் முதலாம் வருட நினைவை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் றெஜி அறக்கட்டளை நிதியம்(திங்கட்கிழமை 10)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் கற்றலில் இடர்படும் சாந்திபுரம் மற்றும் ஜிம்ரோ நகர் பகுதிகளை சேர்ந்த கற்றலில் இடர்படும் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பேராலய பங்குத்தந்தை,கிராம மக்கள்,அமரர் றெஜி அவர்களின் குடும்பத்தினர்,மன்னார் மாவட்ட சிகை அலங்கார சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் அறக்கட்டளையூடாக கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்க உள்ளதாக றெஜி குடும்பத்தினர் தெரிவித்தனர்.