திருகோணமலை – மூதூர், கங்குவேலி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே நேற்று(12) மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.