கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல், கோரவெளி காட்டுப் பகுதியில் துப்பாக்கி, ரவைகள் என்பன நேற்று (12) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது நடாத்திய தேடுதலில் T56 ரக தானியங்கி தாக்குதல் துப்பாக்கி மற்றும் 8 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டது.