“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை யில் இன்று (14) இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள், சிவில் சமூக அமைப்பினர், பெண்கள் அமைப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் என 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நின்றனர்.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 75 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை இல் இடம்பெற்றது.
இதன் போது இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.