வரக்காப்பொல – தும்ம லியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச் சம்பவத்தில் காயமடைந்த 50 வயதான நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதால் மண் சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், நிலவும் கடும் மழை காரணமாக அங்குருவெல்ல வரக்காப்பொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் உள்ள தும்பலியத்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்து உள்ளமையால் வீடொன்றில் சிக்குண்ட 3 பேரை மீட்கும் பணியில் இராணுவத் தளபதியின் பணிப் புரைக்கமைய 8 வது சிங்க படையணியின் படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் குடும்பத்தினரின் ஒருவரை (தந்தை) மீட்டு வரக்காப்பொல வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளது டன் ஏனையவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.