Wednesday, January 15, 2025

துருக்கியில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு! 28 பேர் பலி: 100ற்கு மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வெடிப்பு சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. வெடிப்பின் போது சுமார் 110 பேர் சுரங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பாதி பேர் 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வெடிப்பின் பின்னர்,11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவசரகாலக் குழுக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சுரங்கத்தில் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிப்பு சுமார் 300 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தநிலையில் சுமார் 300 முதல் 350 மீற்றர் வரையிலான ‘ஆபத்தான’ பகுதியில் சுமார் 49 பேர் பணிபுரிந்து வருவதாக உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.வெடிப்புக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவல்களுடன் வெளிவரவில்லை.

நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர்டேம்பினால் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று குறித்த இடத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் ஏற்பட்ட வெடிப்பின்போது 301 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

👆🏼உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ❤️🙏🏼
புதிதாக ஆரம்பித்துள்ள எங்களுடைய ரேடியோ மன்னார் [RadioMannar] தளத்திற்கு வரவேற்கிறோம்

www.radiomannar.live 📡
👆🏼வானொலி கேட்பதற்கு இங்கே கிளிக் செய்யவும் 🎙️🔊🎼💓
மன்னார் நகரில் இருந்து உலகம் முழுவதும் வாழும் எமது உறவுகளைத்தேடி நாட்டு நடப்புகள், செய்திகள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு செல்கிறதுது ,அது மட்டும்அல்லாது மன்னார் மாவட்டதிலும் அதன் அருகில் உள்ள பிரதேங்களில் உள்ள நட்புகளுக்கும் இது போழுதுபோக்கு அம்சமாகவும், ஓர் உறவுப்பாலமாகவும் அமையும்

எங்களுடைய Radiomannr எனும்
https://www.facebook.com/RadioMannar-110551855055955/
இனை👆🏼 like மற்றும் Share செய்து உங்கள் ஆதரவினை வழங்கவும்

Radio Mannar குழுவினர்
நன்றி 💓🤝

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles