மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் உலக உள நலம் தொடர்பாக இன்று விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
உலக உள நல தினத்தை நாம் இன்று அனுஷ்டிப்பதன் நோக்கம் அதிகமானவர்களுக்கு உள நல தினம் என்று தெளிவு படுத்தப்படாத ஒரு பகுதியாக உள்ளது.
இன்றைய தினம் உள நல பிரிவு தொடர்பாகவும், அதன் தார்ப்பரியம் தொடர்பாகவும்,மக்கள் மத்தியில் தெளிவு படுத்தும் வகையில் இந்த நாளில் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.
-இங்கு வருகை தந்த ஒவ்வொருவரும் இங்கு கூறப்படும் கருத்துக்களை நல்ல முறையில் செவிமடுத்து,செயல்படுத்த வேண்டும்.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் குரு முதல்வர்,தற்போதைய இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.