சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டின் கடந்த (15) சனிக்கிழமை மன்னார் எருக்கலம் பிட்டியில் கட்சி ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சாதனையார்களை கெளரவிக்கும் நிகழ்வும் நடை பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த பெரியமடுவைச் சேர்ந்த மாணவி அசீம் அனீகா இ ரவூப் ஹக்கீம் அவர்களினால் கெளரவிக்கப்பட்டார்.