பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.எனவே நாம் முயற்சி உள்ளவர்களாய் எமது சோர்வுகளை களைந்து விட்டு,உழைக்கும் மக்களாக மாற வேண்டும்.என மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் சர்வமத செயல் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலக்கு கிராம மக்களுக்கு செயல் நோக்கு செயலமர்வு புதன்கிழமை(18) மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
குறிப்பாக இவ்வாறான நெருக்கடியான காலகட்டத்தில் எமது வீடுகளில் வீட்டுத்தோட்டத்தை உருவாக்கி எமக்கு தேவையாக மரக்கறி வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
-இதனால் நஞ்சற்ற மரக்கறி வகைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.இதனால் ஆரோக்கியமான,போசாக்கான உணவை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
-இதனால் எமக்கு ஏற்படும் செலவினங்களையும் நாம் குறைத்துக் கொள்ள முடியும்.என அவர் தெரிவித்தார்.