Sunday, February 9, 2025

(photos)-மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில்   இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் .

ஒலி வடிவில் கேட்க:-Radio  mannar

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் பா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான், பல் சமயத் தலைவர் வணபிதா , மற்றும் மனிதநேய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு  படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்

(கனகராசா சரவணன்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles