மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை காண நீர் சம்பிரதாயபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (21) காலை திறந்து விடப்பட்டுள்ளது.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 31 ஆயிரத்து 339 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் அதற்கான நீர் திறந்து விடும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் கட்டுக்கரை குளத்தின் 12 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் ,மன்னார் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர், கட்டுக்கரை நீர்ப்பாசன பொறியியலாளர் ,விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாயத் திணைக்களப் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.