வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற பெண்கள் குழுவினர் பலர் குறித்த திரையரங்கிற்கு நேற்று (21) மாலை திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார்கள். இதன் போது திரையரங்க ஊழியர்கள் பெண்களின் கை ப் பைகளை சோதனை யிட்டுள்ளார்கள்.
இராணுவத்தினர் பெண்களை சோதனையிடுவதற்கு எதிர்ப்பு தெரித்து பெண் போலீசார், பெண் இராணுவத்தினரே பெண்களின் உடமைகளை சோதனையிட்டு வரும் பொழுது குறித்த செங்கலடி திரையரங்கில் மாத்திரம் ஆண்கள் எவ்வாறு பெண்களின் உடமைகளை சோதனை போட முடியும் என்று பெண்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்,
குழந்தைகளுக்குரிய பால் உணவு வகைகளை திரையரங்க உணவுக் கூடங்களில் வேண்டி கொடுக்க முடியாது.