கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை – உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை மொலகொட பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.