மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க திரு அவையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆவண பொறுப்பாளர் அருட்பணி நிக்கல்ஸ ஜூட் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள மறைமாவட்ட கத்தோலிக்க இணையத்தளத்தில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்கர்களின் அருட்சாதன ஆவண பதிவுகளை இலகுவாக துரித கதியில் பெற்றுக்கொள்ளும் இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அருட்பணி நிக்கல்ஸ ஜூட் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க இணையத்தளம் இலங்கையில் முதல் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆவண பொறுப்பாளர் அருட்பணி நிக்கல்ஸ ஜூட் அடிகளார் தெரிவித்துள்ளார் .