மன்னார் மாவட்டத்தில் 2022-2023 ம் ஆண்டுக்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.யோகராசா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார், மாந்தை மேற்கு,நானாட்டான், மடு , முசலி ஆகிய பிரதேச செயலகப் பிரிகளில் பெரும்போக விவசாய செய்கைகளுக்கு உழவு நடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 21ம் திகதி கட்டுக்கரை குளத்தில் இருந்து சிறு குளங்களுக்கு நீர் வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தின் கீழ் 31 ஆயிரத்து 339 ஏக்கரும் மன்னார் மாவட்டம் முழுவதும் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட உள்ளது.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு 2023 மார்ச் முதலாம் திகதி வரை நீர் விநியோகம் நடைபெறும் என்று மன்னார் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். யோகராசா மேலும் தெரிவித்தார்..
