கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.நகரில் இந் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்.பேருந்து நிலையம் உட்பட நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடைக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
எனினும், யாழ் நகரில் வீதிகள் உள்ளிட்ட கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த கடைக்காரர்கள் , யாழ்.நகரில் முறையான நீர்க்குழாய்கள் இல்லாததால் சிறு மழை பெய்தாலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்றனர்.
யாழ்.மாநகர சபை உரிய முறையில் நகரின் குழாய்களை ஒழுங்குபடுத்தினால் இவ்வாறான வெள்ள நிலைமை ஏற்படாது எனவும் எதிர்காலத்தில் மழை அதிகரிக்கும் என்பதால் மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் யாழ்.மாநகரசபையிடம் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.