மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/தோட்டவெளி அ.த.க பாடசாலையின் புதிய கட்டிடம் திறப்பு விழா பாடசாலையின் முதல்வர் தலைமையில் இன்று வியாழக்கிழமை (27) காலை நடை பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதி வலயக்கல்வி பணிப்பாளர்,ஜோசப்வாஸ் நகர் பங்குத்தந்தை,தோட்டவெளி பங்குத்தந்தை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,கிராம மட்ட சமூக அமைப்பின் பிரதிநிதிகள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-இதன் போது கலந்து கொண்ட விருந்தினர்களினால் குறித்த கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
(Pixed by:-Shanmugarajah Prabaharan )