வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 93 ஆவது நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் , முன்னெடுப்பு.
வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 93 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று(1) காலை 9.30 மணியளவில் 93 ஆவது நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் , ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவலி ஆகிய கிராமங்களில் உள்ளடக்கிய சுமார் 200 பேர் உள்ளடங்களான பங்குபற்றுணர்களுடன் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.இதன் ஊடாக வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தரமானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் வெளி கொண்டுவரப்பட்டது
வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் கழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் , ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவலி ஆகிய கிராமங்களில் உள்ளடக்கிய பொது மக்கள் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டார்கள்
மேலும் இதன் போது பொது மகஜர் வாசித்துக் காட்டப்பட்டதுடன், ஜனநாயகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்,தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், ஒன்று கூடுவது எமது உரிமை, அரச சார்பற்ற நிறுவனங்களின் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.