மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனத்தில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் குறித்த நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து பணியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும்,மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமை குறித்து குறித்த அரச சார்பற்ற நிறுவனம் இன்றைய தினம் (2) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
-மன்னாரில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினுள் நபர் ஒருவர் உட்புகுந்து பணியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-அதனைத் தொடர்ந்து குறித்த அலுவலகத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி 2வது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
-எனினும் குறித்த இரு முறைப் பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் பொலிஸார் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்காது அசமந்த போக்குடன் செயல்படுவதாக குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-குறித்த இரு முறைப் பாடுகளுக்கும் மன்னார் பொலிஸார் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்காமை குறித்து குறித்த நிறுவனத்தினர் இன்று புதன்கிழமை(2) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.