Tuesday, January 21, 2025

(PHOTOS)மன்னார் மறைமாவட்டத்தில்  ஆத்துமாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு

ஆத்துமாக்கள் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க மக்கள் மரணித்த  தமது உறவுகளின் கல்லறைகளுக்கு சென்று இன்றைய தினம் புதன்கிழமை (2) வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.  (பட உதவி:- பெனில் பேசாலை)

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க மக்களும் இன்றைய தினம் புதன்கிழமை (2) தமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

-மன்னார் பேசாலையில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் இன்று புதன்கிழமை  மாலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது பேசாலை மக்கள் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்க மற்றும் பொது சேமக்காலையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலிலும், மலர் கொத்துக்கள் வாங்கி, அவற்றை கல்லறைகளில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
 
பட உதவி:- பெனில் பேசாலை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles