Tuesday, May 20, 2025

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் கை குண்டு ஒன்று மீட்கப் பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுங்கேணி பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் குறித்த கைக்குண்டை மீட்டெடுத்தது டன், அதை செயலிழக்கச் செய்துள்ளனர்.

குறித்த கைக் குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஜே.ஆர் வகைக் குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles