Wednesday, May 21, 2025

(Photos)மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தினால் நடாத்தப்பட்ட கரோல் போட்டியின் முடிவுகள் இதோ…….

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருயினால் ஆண்டு தோறும் நடாத்தப்படுகின்ற கரோல் பாடல் போட்டி மற்றும் வில்லுப்பாட்டுப் போட்டிகளானது இவ் வருடம் மடு, மன்னார், முருங்கன் ஆகிய மறைக்கோட்ட பங்குகள் உள்ளடங்கலாக 26.11.2022 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு மன்னார் கலையருவி மண்டபத்திலும் வவுனியா மறைக்கோட்ட பங்குகளை உள்ளடக்கியதாக வவுனியா வேப்பங்குளம் பங்கின் புனித சூசையப்பர் ஆலயத்தில் 27.11.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.
வவுனியா மறைக் கோட்ட மட்டத்திலான போட்டிகளின் போது பிரதம விருந்தினராக அன்புக்கும் பெருமதிப்புக்குரிய அருட்பணி P.கிறிஸ்துநாயகம் அடிகளாரும் ( குருமுதல்வர் மன்னார் மறைமாவட்டம்), கௌரவ விருந்தினர்களாக அருட்பணி ம. செல்வநாதன் பீரிஸ் அடிகளார் ( இயக்குநர் கலையருவி), அருட்பணி கமலநாதன் அடிகளார் OMI (இல்ல மேலாளர் அமதி அகம் ) மற்றும் திருமதி. றோமலதா யூட் நேசராஜா ( ஆசிரிய ஆலோசகர் – கிறிஸ்தவம் ( வலயக்கல்வி அலுவலகம், வவுனியா வடக்கு) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி. அருண்தாஸ் குரூஸ் (உதவி இயக்குனர் வாழ்வுதயம்), அருட்சகோதரி மாகிறட் (இல்ல மேலாளர் திருச்சிலுவை கன்னியர் மடம்), அருட்சகோதரி. யு. பற்றிமா (இல்ல மேலாளர் வைகறை) மற்றும் அருட்சகோதரி குளோறியா (அதிபர் கனறா முன்பள்ளி) கலந்து சிறப்பித்திருந்தனர்.
இப்போட்டியானது இரு மறைகோட்டங்களிலும் மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பங்குகள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
மன்னாரில் நடுவர்களாக miss. சாந்தா கிறிஸ்ரின் ISA வவுனியா தெற்கு, திருமதி ஞானம்மா ஆசிரியர், அருட்சகோதரி மரியகொறற்றி (அன்புக்கன்னியர்) பணியாற்றினார்கள். வவுனியா மறைக் கோட்ட மட்டத்திலான போட்டிகளின் போது நடுவர்களாக, Miss. சாந்தா கிறிஸ்ரின் ISA வவுனியா தெற்கு , திருமதி ரூபன் அன்ரனற் றொஷானி ஆசிரியர் செட்டிகுளம் மகாவித்தியாலயம், Miss. C. B ஜெயசீலி ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்,
———————————————————————————————————————————————————————————————————-
இறுதி முடிவுகள் பின்வருமாறு
மன்னார், மடு, முருங்கன் மறைக்கோட்டம்
முதலாம் இடம் – ஜோசப்வாஸ் நகர்ப் பங்கு
இரண்டாம் இடம் – பேசாலைப் பங்கு
மூன்றாம் இடம் – பள்ளிமுனைப் பங்கு
நான்காம் இடம் – கற்கிடந்த குளம் பங்கு
ஐந்தாம் இடம் – பேராலயப் பங்கு,
வங்காலைப் பங்கு
சிறந்த இசையமைப்பு – ஜோசப்வாஸ்
நகர்ப் பங்கு
சிறந்த பாடல் வரிகள் – கற்கிடந்தகுளம் பங்கு
முதலாம் இடம் – தோட்டவெளிப் பங்கு
இரண்டாம் இடம் – பள்ளிமுனைப் பங்கு
மூன்றாம் இடம் – பேசாலைப் பங்கு
நான்காம் இடம் – கட்டைக்காடுப் பங்கு
ஐந்தாம் இடம் – பண்டிவிரிச்சான் பங்கு
ஆறாம் இடம் – கற்கிடந்தகுளம் பங்கு
சிறந்த இசையமைப்பு – தோட்டவெளிப் பங்கு
சிறந்த பாடல் வரிகள் – பேசாலைப் பங்கு
முதலாம் இடம் கட்டைக்காடுப் பங்கு
வவுனியா மறைக்கோட்டம்
முதலாம் இடம் – இறம்பைக்குளம் பங்கு
சிறந்த இசையமைப்பு, பாடல் வரிகள் – இறம்பைக்குளம் பங்கு
முதலாம் இடம் – வேப்பங்குளம் பங்கு
இரண்டாம் இடம் – கோமரசன் குளம் பங்கு
மூன்றாம் இடம் – இறம்பைக்குளம் பங்கு
நான்காம் இடம் – பம்பைமடுப் பங்கு
சிறந்த இசையமைப்பு – வேப்பங்குளம் பங்கு
சிறந்த பாடல் வரிகள் – கோமரசன் குளம் பங்கு
முதலாம் இடம் – வேப்பங்குளம் பங்கு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles