Monday, May 12, 2025

(PHOTOS)சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-

 மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று  வியாழக்கிழமை(2) மதியம் 1.30 மணியளவில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் றெயினோல்ட் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் லண்டன் பழைய மாணவர் சங்க கிளையின் செயலாளர் திரு.பரமநாயகம் கெளரவ விருந்தினர்களாக  மன்னார் வலய கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.அமல்ராஜ் அவர்களும் IESL நிறுவன வடமாகாண உப தலைவர் பொறியியளாலர் விமலேஸ்வரன் மற்றும் முருங்கன் வைத்தியசாலையின்  பல் சத்திரசிகிச்சை  நிபுணர் கொனோரியன் டயஸ் மன்னார் பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூட் பிரசாந்த் அவர்களும்  விசேட விருந்தினர்களாக நியூஸ்லாண்ட் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களான மரியாம்பிள்ளை எடிசன் மற்றும் எடிசன் ஜெசிக்கா AA sports நிறுவன உறிமையாளர் அமல்ராஜன் வவுனியா தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு பொறுப்பாசிரியர் சுபாஸ்கரன் உட்பட பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலையின் கடந்த மாதங்களில் இடம் பெற்ற போட்டிகளில் இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பழைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான போட்டி நிகழ்சிகளும் இடம் பெற்றது.
அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, பரிசலிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது அதே நேரம் இறுதி நாள் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதல், பதக்கம் மற்றும் வெற்றிக் கேடையங்களும் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles