இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் உமா கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் இன்றைய தினம் (15)நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் இன்றைய தினம் (15)நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , சிறப்பு விருந்தினர்களாக யாழ் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் .ச.ம. சமன் பந்துலசேன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.