எதிர் வரும் 2 வாரங்களில் பாடசாலை புத்தக பைகள், அப்பியாச புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும் என அதன் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் நிறப்பூச்சு, இரும்பு போன்ற கட்டுமானத்துறைசார் பொருட்களின் விலை இதுவரை குறையவில்லை என தேசிய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.