Monday, July 14, 2025

(photos)மன்னாரைச் சேர்ந்த தென்னிந்திய திரையுலகின் தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

மன்னாரைச் சேர்ந்த தென்னிந்திய திரையுலகின் தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி  உடல்நலக்குறைவால் தனது 60 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.இவருடைய தாயகமான இலங்கையில் உள்ள மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை ஆரம்பித்து நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதியாக இராமேஸ்வரம் சென்று நடிகராகியுள்ளார்.தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவரின் வைத்திய செலவுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வந்த நிலையில், நேற்று(23) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மரணம் தென்னிந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles