Wednesday, May 21, 2025

புகையிரத கடவையில் அதிகரிக்கும் விபத்துகள்!

 வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடை முறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல், புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற் பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles