Tuesday, May 13, 2025

பால்மாவின் விலைகளில் மாற்றமா? பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்!

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, பால் மாவுக்கான விலையை ஓரளவு குறைக்க முடியும் என நம்புவதாகவும், விலையை கணக்கிடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles