சுற்றுலாத்துறை மூலமான வருமானம் கடந்த ஆறு மாதங்களில் வெகுவாக அதிகரித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 1,557 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருமானமானது இரண்டு மடங்கு வளர்ச்சியைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது
அதே வேளை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் தவிர்ந்த சேவைகள் துறை வருமானமாக 1,762 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து நாட்டுக்கு கிடைத்துள்ள வருமானம் 3,144 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது