Monday, July 14, 2025

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சின்னம் அறிவிப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலமாகவும் 9 மணிமுதல் 11.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கும் காலமாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். என்றாலும், 39 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 3 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், தேர்தல் சட்டத்தின் 14, 15 பிரிவுகளின் கீழ் குறித்த 3 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles