Monday, July 14, 2025

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்டோருக்கு இன்று காலையிலிருந்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் , நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாணைகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles