இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது….
தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதித்திருந்தேன். மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது.
இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை தெரிவித்திருந்தார். இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார்.
பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர்.
மறுநாள்வைத்தியசாலைக்கு வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர்செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த வைத்தியரை பேசியிருந்தார்.
பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைகூடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர்.
பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார்.
அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள்.
அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம்
.எனினும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
எனவே வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது உள்ளக விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
என்ன மாதிரி இருக்கும் இவர்களது உள்ளக விசாரணை என்று யாழ்ப்பாணம் சிறுமி வைஷாலியின் கை போன சம்பவம்,
மன்னாரில் பச்சிளம் குழந்தையின் தாயின் பரிதாப மரணம், யாழில் மற்றொரு தாய் குழந்தை பெற்று சில நாட்களுக்குள் அம்மை நோய் கண்டும் இவர்களது அசமந்த போக்கினால் உயிரிழந்த சம்பவம் இப்படி பல உள்ளக விசாரணைகளை பார்த்தாயிற்று.
தண்டனைகள் தீவிரமாக்கப்படும் வரை இப்படியான குற்றங்கள் கடைசி வரைக்கும் குறையாது. பிழைத்தால் திருப்பி தைக்கலாம் அல்லது வீசினாலும் ஒரு தொகை பணமே நஷ்டம் என்று இருக்கும் சாதாரண garments கைத்தொழில் பேட்டைகளிலேயே கைத்தொலைபேசி தடை செய்யப்பட்ட ஒன்று. வேலைக்காக உள் நுழையும் போது அவரவருக்கான locker ல் அதை வைத்து விட்டு தான் செல்ல வேண்டும். அதேபோன்றுதான் பிரபல தனியே கோழி இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கும் நிறுவனத்திலும்.
ஏன் கச்சான் பொதி செய்யும் கைத்தொழில் பேட்டைகளில் கூட இப்படித்தான் நடக்கிறது.
எவ்வளவு பெறுமதி மிக்க மனித உயிர்? இறைவன் துணை இன்றி ஒரு மனிதன் உயிரை மீட்பானா?என்றால் நிச்சயம் நடக்காது.
அவ்வாறான ஒரு இடத்தில் தொலைபேசி பாவனை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று. சரியான நிர்வாக கட்டமைப்பு இல்லை.
போதிய கற்றல் அறிவு இல்லை பணம் இருந்தால் போதும் உயர்தரத்தில் 3S(உயிரியல்) எடுத்தவனும் வைத்தியனாகலாம் என்ற நிலை இந்த அவலம் எல்லாம் எப்போது மாறுமோ அப்போதுதான் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இன்னொருவருக்கு நடந்த வரையில் நமக்கு இது சாதாரண சம்பவம்தான். அனுபவிப்பவருக்குத் தான் தெரியும் அந்த வலி.
வைத்திய சாலையில் அநேகர் பயிற்சி வைத்தியர்கள் ஆக இருந்து தங்கள் தேவைக்கு தாதியர்களையே நம்பி உள்ளதால் தாதியர்களுக்கும் அவர்களுக்குமான உறவு ஒரு நட்புறவு போல் இருப்பதாலும் யாரும் யாரையும் சேவையில் தப்பு என்றாலும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
அதைவிட minor staffs அவர்களுக்கு ஒரு பெரிய வைத்தியருக்கு இருப்பதைவிட செல்வாக்கு இருக்கும். கிட்டத்தட்ட அவர்கள் வைத்தது தான் சட்டமென்கிற அளவுக்கு வைத்திய விடுதிகள் இயங்குவதை நாம் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கும். இந்த நிலை எல்லாம் எப்பொழுது மாறுமோ அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழக்கூடும்.
எங்கிருந்தோ ஒரு அர்ஜுனா வந்து தான் நம்மை மீட்க வேண்டும் என்பது இல்லை. இழந்தவருக்கு சுற்று சூழலில் உள்ளவர்கள் உதவி புரிந்து அவர் இழப்புக்கு நியாயம் கேட்கும் போது நாமும் அவர் சார்பில் நிற்க நம்மில் எத்தனை பேருக்கு தைரியம் உள்ளது????
இப்படி இரண்டு உயிரை சாதாரணமாகக் கொன்றால் automatic ஆக பிள்ளை பேறு என்றால் private hospitals ஐ வட்டிக்கு வாங்கியாவது தேடி வருவார்கள் என்று plan பண்ணி செய்யும் சதியோ? அதுவும் இறைவனுக்குத் தான் வெளிச்சம்….