Monday, July 14, 2025

4000 ரூபாவிக்கு யூரியா உரம்

அடுத்த பெரும்போகத்திலிருந்து ஒரு மூட்டை யூரியா உரத்தை 4000 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டின் சிறு போகத்தில் 42000 ரூபாவாக காணப்பட்ட யூரியா உரமூடைவிலை இவ்வருட சிறுபோகத்தில் 8000 ரூபா வரை குறைவடைந்தது. உர கொள்வனவிற்கென 2022ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டின் பெரும்போகம் வரை 55000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அரசாங்கத்தினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இம்முறை பெரும்போகத்திலிருந்து குறித்த தொகையை ஒரு ஹெக்டேயருக்கென 25000 ரூபா வரை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற அடிப்படையில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த 25000 ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles