Monday, July 14, 2025

மன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு(PHOTOS)

 மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (7) மாலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட  காலமாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 54 ஆவது  காலாட்படையின் ஒழுங்கமைப்பில் குறித்த கிராம மக்கள்   குடிநீர் பெறும் வகையில் குறித்த குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இராணுவத்தின் வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் J.P.C.பீரிஸ் மற்றும் 54 காலாட்படை பிரிவின் பொறுப்பதிகாரி  மேஜர் ஜெனரல் R.P.A.R.P  ராஜபக்ஷ, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  .க.கனகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்துள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles