Monday, July 14, 2025

காட்டுப்பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டபோது மரம் ஒன்றில் தூக்கிட்டவாறு பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் (12) மாலை இடம்பெற்றுள்ளது தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles