Monday, May 12, 2025

பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றி!

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சார்ஜா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles