Monday, July 14, 2025

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர்
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.பிரதமரும் அலரி மாளிகையை பயன்படுத்தாமல் தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.அரச சொத்துக்களை வீண் விரயம் செய்வதை தவிர்த்த பணத்தை சேமிக்கவுள்ளதாக, தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles