Sunday, December 8, 2024

முதல் நாள் வசூலில் வேட்டையன் பிரமாண்ட ஓப்பனிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஃபகத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த வேட்டையன் திரைப்படம் அதன் முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் ₹30 கோடி வசூல் செய்து வலுவான ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அக்டோபர் 10 ஆம் திகதி வெளியான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் திரைப்படத்திற்கான இரண்டாவது பெரிய ஓப்பனிங்கைப் பதிவு செய்தது.

எனினும், தளபதி விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

GOAT முதல் நாள் வசூலாக இந்தியாவில் ₹44 ரூபாவை வசூலித்திருந்தது.

ஆரம்ப வர்த்தக அறிக்கைகளின்படி, தசரா விடுமுறையைுடனான அடுத்த மூன்று நாட்களில் வேட்டையன் வசூல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படத்தில் ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை சரண்யா (துஷாரா விஜயன்) தனது பள்ளிக்கு அருகில் நடக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை வெளிப்படுத்துகிறார்.

மாணவர்களின் பிரச்சனைக்காகப் போராடும் ஆசிரியர் சரண்யா ஒரு கட்டத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய என்கவுன்டர் கொலைகளுக்கு பெயர் பெற்ற கன்னியாகுமரி எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்) இந்த வழக்கை எடுத்துக்கொள்ளும் விதமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் வசூல் சுருக்கம்

இந்தியா முழுவதும் – 30 கோடி இந்திய ரூபா

தமிழ்: 26.15 கோடி இந்திய ரூபா

தெலுங்கு: 3.2 கோடி இந்திய ரூபா

இந்தி: 0.6 கோடி இந்திய ரூபா

கன்னடம்: 0.05 கோடி இந்திய ரூபா

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles