யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளை இலக்கு வைத்து பாடசாலை மாணவர்களுக்கு அதிக விலைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை (24.10)) கைது செய்து, மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரிடம் இருந்து 840 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 23ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நபர் ஒருவரைக் கைது செய்து 1400 போதை மாத்திரைகளை கண்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.