Wednesday, January 15, 2025

போராட்டத் தடைக்கு | மன்றில் உத்தரவுக்கு விண்ணப்பித்த பொலிசார் கைவாங்கினர்

06|11|2024  | Wednesday | Mannar Sri Lanka

கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்Pடு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரிகள் ஈடுபட வந்தபொழுது பெயர் குறிப்பிடப்பட்ட அரசியல் வாதிகள் மதக் குருக்களுக்கு தடை உத்தரவு வழங்க வேண்டும்  என பொலிசாரால் மன்றுக்கு கொண்டு வரப்பட்ட வழக்கு கைவாங்கப்பட்டது.

புதன்கிழமை (06) காலை மன்னார் தீவில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் ஓலைத்தொடுவாய் வளனார் பகுதியில் கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீடு செய்ய வந்தவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்புக்கு காரணகத்தாக்களாக காணப்பட்தாக தெரிவித்து சட்டத்தரணி எஸ்.டினேசன் , முன்னாள் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் . மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் சிரேஷ்ட அருட்பணியாளர் எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை கோவை 106 பிரிவின் கீழ் மன்னார் பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றை முன்னெடுத்தனர்

இது தொடர்பாக பாதிப்படைந்த மக்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி பி.டனிஸ்வரன் தெரிவிக்கையில்

அதாவது  கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்Pடு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரிகள் ஈடுபட முனைந்தபொழுது இதை தடைசெய்யும் நோக்குடன் வீதியில் மரங்களை போட்டு அவர்கள் செல்வதற்கு மக்கள் தடைகள் போட்டு இருந்தனர்.

இதனால் பொது தொல்லைகள் ஏற்படுத்தப்பட்டமையாலும் சட்டத்தரணி எஸ்.டினேசன் , முன்னாள் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் . மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் சிரேஷ்ட அருட்பணியாளர் எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆகியோர் மக்களை ஒன்றுத் திரட்டி அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தன்மையில் இவர்கள் ஈடுபட்டார்கள் என தெரிவித்து இவர்களுக்கு எதிராக மன்னார் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் போடப்பட்ட தடைகளை நீக்கும்படியும் கடமையை மேற்கொள்ள வந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் அவர்களின் கடமைகளை முன்னெடுக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும் பொலிசாரின் விண்ணப்பம் காணப்பட்டது.

இது தொடர்பாக மன்றில் பொது மக்கள் சார்பாக மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனி டெனிஸ்வரன் ஆகிய எனது தலைமையில் பத்து  சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்ததுடன்; மன்றில் தாங்கள் கருத்துக்களை இவ்வாறு முன்வைத்திருந்தோம்.

கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டபோது இதே மாதிரி மக்கள் போராட்டம்  இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து அது நிறுத்தப்பட்டது.

அத்துடன் கடந்த திங்கள் கிழமையும் ஆராய்ச்சி செய்யப் போகின்றோம் என தெரிவித்து இவ்வாறான ஒரு செயற்பாடு பிரத்தியேக வழக்காக கொண்டு வரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது மன்னார் கோட் நம்பர் 2 இல் மன்னார் பிரஜைகள் குழுவுக்கு எதிராகவும் தடை உத்தரவு செய்யும்படி கொண்டு வரப்பட்டது.

இங்கு இந்த வழக்கில் இரு சாராரின் கருத்துக்களையும் நீதவான் விரிவாக கேட்டறிந்தபின் வழக்கை தள்ளுப்படி செய்திருந்தார்.

இவற்றை பொது மக்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆதாராமாக முன்வைத்திருந்தனர்.

ஆகவே பொலிசார் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது போல பொது மக்கள் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் மன்னார் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் மன்னார் ஒரு சிறிய தீவு இது அழிவுறா நோக்குடன் எதிர்கால சந்ததினரின் நலன் நோக்கியே இங்கு மணல் அகழ்வு எற்படக் கூடாது என்ற நோக்கிலே பொது மக்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தகவல் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து உடனே பொலிசார் தாக்கல் செய்த இந்த வழக்கு உடனே பொலிசாரால் கைவாங்கப்பட்டதாக இந்த வழக்கில் பொது மக்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி பி.டெனிஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles