கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீடு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து பல வாகனங்களில் வருகை தந்த அதிகாரிகளையும் இவர்களுடன் வருகை தந்த மன்னார் அதிகாரிகளையும் இப் பகுதி மக்களும் பொது அமைப்புக்ளும் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல அனுமதிக்காது எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இடம்பெற்றது. நீதிமன்ற உத்தரவு பெற்று பணியை தொடர பொலிசார் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இச்சம்பவம் புதன்கிழமை ( 06|11|024 ) காலை மன்னார் தீவில் பிரதேச செயலகப் பிரிவில் ஓலைத்தொடுவாய் வளனார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
சம்பவதினத்தன்று
(06|11|2024) மேற்குறிப்பிட்டப் பர்தியில் மக்களின் நீண்டகால எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இப்பகுதியில் கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக இப்பகுதிக்கு அதிகாரிகள் வருகை தர இருப்பதாக தெரிய வந்ததும் இப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களும் காலை நேரத்துடன் சம்பவ இடத்துக்கு படையெடுத்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து பல வாகனங்களில் அதிகாரிகள் இவ்விடத்துக்கு கனியவள மணல் அகழ்வு செய்யும் முகவருடன் பொலிஸ் உயர் பாதுகாப்புடன் அவ்விடத்துக்கு வருகைத் தந்திருந்த பொழுது பொது மக்கள் பாதைகளை மறித்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல விடாது தடுத்திருந்தனர்.
அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் , அரசியல் வாதிகள் , பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் தர்க்கப்படுகையில்
மன்னாரில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள காற்றாலை அமைப்பால் மன்னார் தீவு மழை பெய்கின்றபோது வெள்ளத்தால் மூழ்கி வருகின்றது.
இந்த நிலையில் கடற்கரையோரத்தில் கனியவள மணல் அகழ்வும் இடம்பெற்றால் மன்னார் தீவு சொற்ப காலத்தில் கடலில் மூழ்கும் அபாய நிலை உருவாகும்.
கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் இவ்வாறான செயற்பாட்டில் அதிகாரிகள் இங்கு ஈடுபட்டபோது மக்களால் தடை செய்யப்பட்டதையும் நினைவூட்டினர்.
அத்துடன் தற்பொழுது தேர்தல் காலத்தில் முன்னைய அரசு முன்னெடுத்த இவ்வாறான மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடாது தேர்தல் முடிந்த பின் நாங்கள் புதிய ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு பெறும் வரைக்கும் இன்றைய செயற்பாட்டை நிறுத்தக்கோரி வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ச்து பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கனியவள மணல் அகழ்வுக்கான நடவடிக்கையாக கடற்கரையோரப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்Pடு அறிக்கை மேறகொள்வதற்காக இன்றைய தினம் (06) முயற்சிகள் மேற்கொண்டு மாலை மன்றில் விசாரனைண நடைபெற்றபோது மக்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகியதுடன் பொலிசாரும் தாக்கல் செய்த மனுவை கைவாங்கியதாலும் அது நீதிமன்றத்தால் தொடர்ந்து மதீப்பீடு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.